1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 4 ஜூன் 2024 (08:03 IST)

இந்திய அணிக்குப் பயிற்சியாளராக ஆசைப்படும் கங்குலி… கம்பீருக்கு போட்டியா?

இந்திய அணியின் பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட், நடந்து வரும் டி 20 உலகக் கோப்பை தொடரோடு அந்த பதவியிலிருந்து விலகவுள்ளார். ஏற்கனவே அவரது பதவிக்காலம் முடிந்த பின்னரும் நீட்டிக்கபட்டுள்ளது.

இதனால் இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளரை தேடும் பணியில் பிசிசிஐ இறங்கியுள்ளது. இதில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கம்பீர் முன்னணியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. விரைவில் அது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய கங்குலி “இந்திய அணிக்கு பயிற்சியாளராக செயல்பட நானும் விரும்புகிறேன். ஆனால் அந்த பொறுப்புக்குக் கம்பீர் ஆசைப்பட்டால் நிச்சயம் அவர் ஒரு நல்ல தேர்வாக இருப்பார்” எனக் கூறியுள்ளார்.