1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 20 மார்ச் 2025 (07:55 IST)

விறுவிறுப்பாக நடக்கும் ‘வாடிவாசல்’ படப்பணிகள்.. ஜி வி பிரகாஷ் கொடுத்த அப்டேட்!

விடுதலை படத்தை வெற்றிமாறன் தொடங்கும் முன்பே ‘வாடிவாசல்’ படத்தை சூர்யா மற்றும் தயாரிப்பாளர் தாணுவோடு இணைந்து அறிவித்தார். ஆனால் சிறிய பட்ஜெட்டில் தொடங்கிய விடுதலை நான்கு ஆண்டுகளுக்கு மேல் இழுத்துக் கொண்டதால் இன்னும் ‘வாடிவாசல்’ தொடங்கப்படவில்லை.

தற்போது விடுதலை 2 திரைப்படம் ரிலீஸாகிவிட்டதால் வெற்றிமாறன் ‘வாடிவாசல்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் ‘வாடிவாசல்’ திரைப்படத்தை மூன்று பாகங்களாக உருவாக்கப்பட உள்ளதாகவும் இந்த ஆண்டு மத்தியில் ஷூட்டிங் தொடங்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் படத்தின் இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் படத்துக்கான இசையமைப்புப் பணிகள் தொடங்கியுள்ளதாக அறிவித்தார். மேலும் இயக்குனர் வெற்றிமாறனோடு இசையமக்கும் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் த்ற்போது வாடிவாசல் படத்துக்கான முதல் பாடலை நேற்று அவர் பதிவு செய்துள்ளார். இதையும் ஜி வி பிரகாஷே தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார்.