விக்ரம் & ரஞ்சித் படத்தின் இசையமைப்பாளர் இவர்தானாம்!
விக்ரம் மற்றும் பா ரஞ்சித் இணையும் புதிய படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க உள்ளது.
இயக்குனர் பா ரஞ்சித் மற்றும் விக்ரம் கூட்டணி குறித்து கடந்த சில வருடங்களாகவே பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் அது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை கே ஈ ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இந்த படத்துக்கு இசையமைப்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. வழக்கமாக சந்தோஷ் நாராயணன்தான் ரஞ்சித் படங்களுக்கு இசையமைப்பார்.
ஆனால் கடந்த சில வருடங்களாக அவர்களுக்குள் எழுந்த கருத்து வேறுபாட்டால் ரஞ்சித் வேறு இசையமைப்பாளர்களை தேடி செல்கிறார். இப்போது அவர் இயக்கும் நட்சத்திரம் நகர்கிறது படத்துக்குக் கூட தென்மா என்ற புதிய இசையமைப்பாளர் இசையமைக்கிறார். இந்நிலையில் அடுத்து விக்ரம்மை வைத்து இயக்கும் படத்துக்கு அனிருத் மற்றும் ஜி வி பிரகாஷ்குமார் ஆகியவர்களிடம் பேச்சுவார்த்தை நடக்கிறதாம். இதில் ஜி வி பிரகாஷ் குமாரே இசையமைக்க அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.