1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: புதன், 5 அக்டோபர் 2016 (12:47 IST)

ஜீ.வி.பிரகாஷ் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் ஜீவா

ஜீ.வி.பிரகாஷ் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் ஜீவா

ஜீ.வி.பிரகாஷ் நடிக்கும் கடவுள் இருக்கிறான் குமாரு படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார் ஜீவா.


 
 
ராஜேஷ் இயக்கும் படங்களில் முன்னணி நடிகர்கள் யாராவது சிறப்புத் தோற்றத்தில் நடிப்பது வழக்கம். பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஜீவா ஒரேயொரு காட்சியில் நடித்திருந்தார். 
 
ஜீ.வி.பிரகாஷ் நடிப்பில் ராஜேஷ் இயக்கிவரும் கடவுள் இருக்கிறான் குமாரு படத்திலும் ஜீவா ஒரேயொரு காட்சியில் நடிக்கிறார். தீபாவளிக்கு இந்தப் படம் திரைக்கு வருகிறது. இந்த படத்திலும் ஏதாவது ஒரு பெரிய நடிகரை சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவைக்க எம்.ராஜேஷ் முடிவு செய்தார். அதன்படி, நடிகர் ஜீவாவை இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க எம்.ராஜேஷ் அழைப்பு விடுத்தார். எம்.ராஜேஷின் அழைப்பை ஜீவாவும் ஏற்று, இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளாராம்.
 
ஜி.வி.பிரகாஷே இப்படத்திற்கும் இசையமைக்கிறார். அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் டி.சிவா இப்படத்தை தயாரிக்கிறார். இப்படம் வருகிற தீபாவளிக்கு ரிலீசாக இருக்கிறது.