வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வெள்ளி, 27 டிசம்பர் 2024 (13:48 IST)

விஜய் ஆண்டனி இசைக்கச்சேரிக்கு வருபவர்களுக்கு இலவச பயணம்.. சென்னை மெட்ரோ அறிவிப்பு..!

சென்னையில் நாளை விஜய் ஆண்டனி இசை கச்சேரி நடைபெற இருக்கும் நிலையில் இந்த கச்சேரியை பார்க்க வருபவர்களுக்கு இலவச மெட்ரோ பயணம் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை ஏஎம் ஜெயின் கல்லூரியில் நாளை விஜய் ஆண்டனி இன்னிசை கச்சேரி நடைபெற இருக்கும் நிலையில் இந்த இசை நிகழ்ச்சிக்கு முன்பதிவு செய்யப்பட்ட டிஜிட்டல் டிக்கெட் வைத்து இருப்பவர்களுக்கு மெட்ரோ ரயில் பயணம் இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்பதிவு செய்து டிஜிட்டல் டிக்கெட்டுகளை பயன்படுத்தி எந்த ஒரு மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்தும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு மிக அருகில் உள்ள மீனம்பாக்கம் மெட்ரோ நிலையத்திற்கு சென்று திரும்ப முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் டிக்கெட் வைத்து இருப்பவர்கள் தங்கள் முன்பதிவு செய்யப்பட்ட டிஜிட்டல் டிக்கெட்டுகளில் உள்ள க்யூ ஆர் குறியீட்டை தானியங்கி நுழைவு எந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோ ரயிலில் பயணம் செய்யலாம் என்றும் இந்த சிறப்பு சலுகை ஒரு சுற்று பயணத்திற்கு மட்டுமே பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மீனம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து விம்கோ நகர் பணிமனை மெட்ரோ நிலையம் வரை செல்லும் கடைசி மெட்ரோ ரயில் இரவு 12 மணிக்கு புறப்படும் என்றும் அதுவரை இந்த டிக்கெட்டை வைத்து மெட்ரோ ரயில் இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Siva