தந்தை கமல்ஹாசனையே விஞ்சிய மகள் ஸ்ருதிஹாசன்!


லெனின் அகத்தியநாடன்| Last Updated: புதன், 28 டிசம்பர் 2016 (02:08 IST)
இந்தியாவின் முன்னணியில் உள்ள 100 நட்சத்திரங்களின் பட்டியலில் நடிகை ஸ்ருதிஹாசன் அவரது தந்தையான கமல்ஹாசனை முந்தி இடம் பிடித்துள்ளார்.

 

இந்தியாவின் முன்னணியில் உள்ள 100 நட்சத்திரங்களின் பட்டியலை ‘போர்ப்ஸ்’ பத்திரிகை வெளியிட்டிருக்கிறது. இந்த பட்டியலில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் முதலிடத்திலும், ஷாருக்கான் 2ஆவது இடத்திலும், கிரிக்கெட் வீரர் விராட் கோலி 3ஆவது இடத்திலும் உள்ளனர்.

தவிர, அக்‌ஷய் குமார் 4வது இடத்திலும், எம்.எஸ்.தோனி 5வது இடத்திலும் உள்ளனர். சச்சின் டெண்டுல்கர் 7ஆவது இடத்திலும், அமிதாப் பச்சன் 9ஆவது இடத்திலும், கிருத்திக் ரோஷன் 10ஆவது இடத்திலும் உள்ளனர்.

மேலும், இந்தப் பட்டியலில் ஏ.ஆர்.ரஹ்மான் 13வது இடத்திலும், ஆமிர் கான் 14ஆவது இடத்திலும், ரோஹித் சர்மா 16ஆவது இடத்திலும், யுவராஜ் சிங் 17ஆவது இடத்திலும், கிரிக்கெட் வீரர் அஸ்வின் 27ஆவது இடத்திலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 30வது இடத்திலும் இருக்கின்றனர்.

அந்த வரிசையில் நடிகை ஸ்ருதிஹாசனுக்கு 46ஆவது இடமும், அவரது தந்தையான கமல்ஹாசனுக்கு 49ஆவது இடமும் கிடைத்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :