1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : திங்கள், 13 மார்ச் 2017 (15:35 IST)

இரண்டு ஹீரோயின்களுடன் டூயட் பாடும் ஜூனியர் என்.டி.ஆர்

ஜூனியர் என்.டி.ஆர். நடிக்க இருக்கும் புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்க இரண்டு நடிகைகள் ஒப்பந்தம்  செய்யப்பட்டுள்ளனர்.

 
கே.எஸ்.ரவீந்திராஸ் இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர். நடிக்கும் புதிய தெலுங்குப் படம் மார்ச் 15ஆம் தேதி தொடங்குகிறது. இந்தப் படத்தில் முதல் முறையாக மூன்று வேடங்களில் நடிக்கிறார் ஜூனியர் என்.டி.ஆர். மூன்று வேடங்களுக்கும் மூன்று ஹீரோயின்கள் என அவரின் ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், இரண்டு ஹீரோயின்கள் மட்டுமே என்ற தகவல் கிடைத்துள்ளது. 
 
ராஷி கண்ணா மற்றும் நிவேதா தாமஸ் இருவரும்தான் அந்த ஹீரோயின்கள். மூன்றாவது வேடத்துக்கு ஜோடியாக பிரபல  நடிகை யாரையாவது கெஸ்ட் ரோலில் நடிக்க வைக்க முடிவு செய்துள்ளனர். இந்தப் படத்துக்காக தனது உடல் எடையைக் குறைத்து கட்டுமஸ்தாக ஆகியிருக்கிறாராம் ஜூனியர் என்.டி.ஆர்.