வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : திங்கள், 24 அக்டோபர் 2016 (18:26 IST)

முதல்முறையாக விஜய் சேதுபதி ஜோடியாகும் த்ரிஷா

முதல்முறையாக விஜய் சேதுபதி ஜோடியாகும் த்ரிஷா

நயன்தாரா ஒருபக்கம் அதர்வா, சிவகார்த்திகேயன் என்று இளையதலைமுறை நடிகர்களுடன் நடிக்கிறார். த்ரிஷாவுக்கு சீனியர் நடிகர்களின் படங்களே எப்போதாவதுதான் வருகிறது. இந்நிலையில், விஜய் சேதுபதியுடன் நடிக்க அவர் ஒப்பந்தமாகியுள்ளார்.

 
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் ஒளிப்பதிவாளர் பிரேம் குமார். இவருடைய வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவத்தை வைத்துதான் அந்தப் படத்தை பாலாஜி தரணீதரன் இயக்கினார். இப்போது பிரேம் குமார் இயக்குனராகியுள்ளார்.
 
அவர் இயக்கும் படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக த்ரிஷாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். இவர்கள் இணைவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.