Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பிரபுதேவாவிற்காக அமைக்கப்பட்ட கார் தொங்கு தோட்டம்

Cauveri Manickam (Sasi)| Last Modified வெள்ளி, 11 ஆகஸ்ட் 2017 (09:50 IST)
பிரபுதேவா நடித்துவரும் ‘குலேபகாவலி’ படத்துக்காக, கார் தொங்கு தோட்டம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

 
 
கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் பிரபுதேவா – ஹன்சிகா நடித்துவரும் படம் ‘குலேபகாவலி’. இந்தப் படத்தில்  பிரபுதேவாவின் இண்ட்ரோ பாடலை, பிரமாண்டமான முறையில் படமாக்கத் திட்டமிட்டனர். எனவே, ஸ்ரீபெரும்புதூர் அருகே  இரண்டு ஏக்கர் நிலத்தில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டது. செட்டுக்குள் கார்களைத் தொங்கவிட்டு, கார் கார்டன் போல உருவாக்கியிருந்தனர். ‘சிங்கம்’, ‘பயணம்’, ‘போக்கிரி’ உள்ளிட்ட பல படங்களுக்கு கலை இயக்குநராகப் பணியாற்றிய  கதிர், இந்த கார் தொங்கு தோட்டத்தை உருவாக்கியுள்ளார். 25 நாட்கள் உழைப்பில் இந்த கார் தொங்கு தோட்டம்  உருவாக்கப்பட்டுள்ளது.
 
டோலிவுட்டின் மிகப்பெரும் நடன இயக்குநரான ஜானியின் மூவ்மெண்டுகளுக்கு நடனமாடினார் பிரபுதேவா. 4 நாட்கள் அங்கு  பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்தப் பாடலில், பிரபுதேவாவின் தம்பி நாகேந்திர பிரசாத், பிரபுதேவாவுடன் இணைந்து நடனமாடியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :