பணத்துக்காகத்தான் டி.வி. தொகுப்பாளர் ஆனாராம் கமல்…

Cauveri Manickam| Last Modified சனி, 13 மே 2017 (11:29 IST)
பணத்துக்காகத்தான் டி.வி. நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க ஒப்புக் கொண்டதாகத் தெரிவித்துள்ளார் கமல்.

 
ஹிந்தி மற்றும் கன்னடத்தில் பிரபலமான நிகழ்ச்சி ‘பிக் பாஸ்’. இந்த நிகழ்ச்சியை, விஜய் டி.வி.க்காக தமிழில் தொகுத்து  வழங்க இருக்கிறார் கமல். சினிமாவில் பிஸியாக இருக்கும் கமல், டி.வி.க்கு வந்தது ஏன் என்று கேள்வி எழுந்தது.
 
இதற்குப் பதிலளித்த கமல், “சினிமாவைவிட டி.வி. மூலம் நிறைய பேரைச் சென்றடைய முடியும். பணமும் எனக்கு முக்கியம். பணத்துக்காகத்தான் இந்த பிசினஸில் நான் இருக்கிறேன். சினிமாவிலும் சும்மா நடிப்பதில்லையே…
 
முக்கியமான விஷயம், சினிமாவைப் போல இதற்கு டிக்கெட் விற்றாக வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதுவே, எனக்கு மிகப்பெரிய உற்சாகத்தைக் கொடுக்கிறது. பணமும், நிறைய பேரைச் சென்றடையும் வழியும் ஒரே நேரத்தில் கிடைக்கும்போது, அதை நான் மறுக்கவா முடியும்?’ என்று தெரிவித்துள்ளார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :