Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இயக்குநருக்கு புது கண்டிஷன் போட்ட நடிகை சமந்தா!

Sasikala| Last Updated: வெள்ளி, 28 ஜூலை 2017 (18:21 IST)
ரஜினி முருகன், வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட வெற்றி கூட்டணியை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன், பொன்ராம், சூரி,  டி.இமான் வெற்றிக் கூட்டணி மூன்றாவது முறையாக மீண்டும் இணைந்திருக்கிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக முதல்முறையாக சமந்தா நடிக்கிறார்.
 
இப்படத்தில் இவர்களுடன் சிம்ரன், நெப்போலியன் தந்தை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தை 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் வில்லியாக சிம்ரனும் நடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 
பொன்ராம் இயக்கத்தில், படப்பிடிப்பு தென்காசி, குற்றாலம் பகுதியில் நடந்து வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக வந்த  சமந்தா, “வெயில் அதிகமாவதற்கு முன்பு தனது காட்சிகளை படமாக்க வேண்டும். அல்லது வெயில் குறைந்த பிறகு நடிக்கிறேன். முடிந்தவரை நேரடியாக என் மீது வெயில் படாதவாறு படப்பிடிப்பை நடத்த வேண்டும்” என்று இயக்குநரிடம்  கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.
 
சமந்தாவுக்கு ஏற்கனவே தோல் அலர்ஜி பிரச்சினை உள்ளது. மேலும் கூடிய சீக்கிரம் திருமணம் நடைபெற உள்ளதால்தான் இந்த  நிபந்தனை வைத்திருக்க கூடும் எனவும் கூறப்படுகிறது. ஜனவரி 29-ம் தேதி நாக சைதன்யா - சமந்தா இருவரின் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. வரும் அக்டோபர் 6-ம் தேதி கோவாவில் நாக சைதன்யா மற்றும் சமந்தா திருமண  நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :