Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அருண் விஜய் ஹீரோயினைத் தொடர்ந்து, வில்லனையும் தூக்கிய சசிகுமார்

Cauveri Manickam (Sasi)| Last Modified வியாழன், 13 ஜூலை 2017 (09:54 IST)
தயாரிப்பாளரான இந்தர் குமார், சசிகுமார் நடிக்கும் ‘கொடி வீரன்’ படத்தில் வில்லனாக நடிக்கிறார்.

 
 
முத்தையா இயக்கத்தில் சசிகுமார் நடித்துவரும் படம் ‘கொடி வீரன்’. பூர்ணா, மகிமா நம்பியார், சனுஷா என மூன்று  ஹீரோயின்கள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். சசிகுமாரின் கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்து வருகிறது.
 
இந்தப் படத்தில், சசிகுமாருக்கு வில்லனாக ‘மதயானைக் கூட்டம்’ படத்தின் இயக்குனர் விக்ரம் சுகுமாறன் நடிப்பதாகத் தகவல் வெளிவந்தது. ஆனால், தற்போது தயாரிப்பாளரான இந்தர் குமார் நடிக்கிறார். அருண் விஜய் நடித்த ‘குற்றம் 23’  படத்தைத் தயாரித்தவர் இவர். அருண் விஜய் – மகிழ் திருமேனி மீண்டும் இணையும் ‘தடம்’ படத்திலும் வில்லனாக நடிக்க  இருப்பவர் இவர்தான்.


இதில் மேலும் படிக்கவும் :