Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஐந்து புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்த விஜய்சேதுபதி!

Sasikala| Last Modified செவ்வாய், 21 பிப்ரவரி 2017 (15:22 IST)
சினிமாவில் 70 மற்றும் 80 ஆம் ஆண்டுகளில் முன்னணியில் உள்ள ஒரு ஹீரோ முன்னணிக்கு ஒரே ஆண்டில் 15, 20  படங்களில் எல்லாம் நடித்து தள்ளுவார். ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. ஒரு ஹீரோ ஒரு நேரத்தில் ஒரே ஒரு  படத்தில் மட்டும் தான் நடிக்கிறார். இதில் விஜய்சேதுபதி மட்டும்தான் விதிவிலக்கு.

 
கடந்த ஆண்டு மட்டும் ஆறு படங்கள் விஜய் சேதுபதிக்கு ரிலீஸ் ஆனது. இந்த ஆண்டு இரண்டு படங்கள் முடிவடைந்த  நிலையில் வெளியீடுக்காக காத்திருக்கின்றன. தவிர ஐந்து படங்கள் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கின்றன. இவை  மட்டுமில்லாமல் சென்ற வாரம் ஒரு படத்துக்கு பூஜை போட்டார்கள். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஐந்து புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யபட்டுள்ளார். 
 
2019 ஆண்டு ஆகஸ்டு வரை விஜய்சேதுபதியின் கால்ஷீட் டைரி ஃபுல் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது சிவாஜி  புரடெக்ஷன் சார்பில் பிரபு தயாரிப்பில் விஜய் சேதுபதி மற்றும் ராகவா லாரன்ஸ் ஆகியோர் நடிக்கவுள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :