திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 15 நவம்பர் 2021 (14:48 IST)

இந்த வாரம் வெளியாக இருக்கும் தமிழ்ப் படங்கள்!

தீபாவளி விடுமுறை முடிந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளனர்.

தீபாவளிப் பண்டிகைக்கு இந்த ஆண்டு அண்ணாத்த மற்றும் எனிமி என்ற இரு திரைப்படங்கள் மட்டுமே ரிலிஸ் ஆகின. அதிலும் பெரும்பாலான திரைகளை அண்ணாத்த திரைப்படத்துக்கே ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் இப்போது இவ்விரு படங்கள் ஓடும் திரையரங்கங்களும் ஈயாடுவதால் அடுத்தடுத்து படங்கள் ரிலிஸுக்கு தயாராகியுள்ளன.

அதையடுத்து நவம்பர் 19 ஆம் தேதி வரும் வெள்ளிக்கிழமை 5 படங்கள் ரிலிஸாக உள்ளன. அதில் சந்தானத்தின் சபாபதி, தயாரிப்பாளர் சி வி குமார் தயாரித்துள்ளார் ஜாங்கோ மற்றும் கடேசில பிரியாணி ஆகிய படங்கள் ரிலீஸாகின்றன. நவம்பர் 25 ஆம் தேதி மாநாடு ரிலிஸ் ஆவதால் இந்த படங்களுக்கு ஒருவாரம் தான் முக்கியமான திரைகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. இதில் அருண் விஜய்யின் பார்டர் மற்றும் சாந்தணுவின் முருங்கைக்காய் சிப்ஸ் ஆகிய படங்கள் தங்கள் வெளியீட்டை பின் தள்ளி வைத்துள்ளன.