Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

முதன்முதலாக ஒரு ஹீரோயினுடன் நெருக்கமாக நடித்திருக்கிறேன் – விஜய் ஆண்டனி

Vijay Antony
CM| Last Updated: திங்கள், 14 மே 2018 (18:53 IST)
முதன்முதலாக ஒரு ஹீரோயினுடன் நெருக்கமாக நடித்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார் விஜய் ஆண்டனி.

 
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘காளி’. விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா என 4 ஹீரோயின்கள் நடித்துள்ளார். விஜய் ஆண்டனியே இசையமைத்து, தயாரிக்கவும் செய்துள்ளார். வருகிற வெள்ளிக்கிழமை இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது.
 
இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய விஜய் ஆண்டனி, “நான் ஹீரோயின்களுடன் நெருக்கமாக நடிப்பதில்லை என உங்களுக்கு (பத்திரிகையாளர்களுக்கு) வருத்தம் இருந்தது. இந்தப் படத்தில் அந்த வருத்தம் இருக்காது. அம்ரிதாவுடன் சேர்ந்து நெருக்கமான காட்சிகளில் நடித்திருக்கிறேன். படம் பார்க்கும்போது அது உங்களுக்குப் புரியும்” என சிரித்துக் கொண்டே கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :