ஹாலிவுட்டில் அறிமுகமான முதல் பாகிஸ்தான் நடிகர் காலமானார்.
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த மூத்த நடிகர் ஷியா முகைதின் முதிர்வு காரணமாக காலமானார்.
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பிரபல நடிகர் ஷியா முகைதின்(91). இவர், டேவிட் லீன் இயக்கி, மவுரிஸ் ஜெரி இசையமைப்பில் வெளியான லாரன்ஸ் ஆப் அராபிக் என்ற படத்தில் ஹாலிவுட்டில் அறிமுகம் ஆனார்.
பாகிஸ்தான் நாட்டில் இருந்து முதன் முதலில் ஹாலிவுட்டில் நடித்தவர் என்ற பெருமையைப் பெற்ற அவர், பல சினிமாக்களில்; நடிகராகவும், இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் செயல்பட்டு வந்தார்.
இவர், பாகிஸ்தான் நாட்டில் வசித்து வந்த நிலையில்,சமீபத்தில் அவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் பெற்று வந்தார்.
இந்த நிலையில், இன்று ஷியா முகைதின் இன்று உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். அவரது மறைவுக்கு சினிமாத்துறையினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.