வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 4 ஜூலை 2022 (16:38 IST)

காளி சர்ச்சை - இயக்குநர் லீனா மணிமேகலை மீது புகார்!

ஆவண படமான 'காளி' இயக்குநர் லீனா மணிமேகலை மீது டெல்லி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

 
தமிழில் பல்வேறு ஆவணப்படங்களை இயக்கி வருபவரும், சமூக செயற்பாட்டாளருமாக இருந்து வருபவர் லீனா மணிமேகலை. இவர் தற்போது “காளி” என்ற ஆவணப்படத்தை இயக்கியுள்ளார். நாடக பாணியிலான இந்த ஆவணப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.
 
அதில் காளிதேவி ஒரு கையில் LGBTQ சமூகத்தினரின் கோடியை ஏந்தியபடி, மறுகையில் சிகரெட் புகைப்பது போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்து மத ஆர்வலர்கள் கடும் கண்டனங்கள் தெரிவித்துள்ளதோடு ட்விட்டரில் #ArrestLeenaManimekalai என்ற ஹேஷ்டேகையும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
 
இந்நிலையில் புதிய ஆவண படமான 'காளி' தொடர்பான சர்ச்சைக்குரிய போஸ்டர் மூலம் மத உணர்வுகளை புண்படுத்தியதாக இயக்குநர் லீனா மணிமேகலை மீது டெல்லி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் வினீத் ஜிண்டால் அவருக்கு எதிரான புகாரை பதிவு செய்துள்ளார். காளி பட போஸ்டர் மிகவும் ஆட்சேபனைக்குரியது என்று அவர் அந்த மனுவில் குறிபிடப்பட்டுள்ளது.