வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : வெள்ளி, 24 ஜூன் 2016 (12:03 IST)

நிதி மோசடி, வரி ஏய்ப்பு - லைக்கா நிறுவனம் மறுப்பு

நிதி மோசடி, வரி ஏய்ப்பு - லைக்கா நிறுவனம் மறுப்பு

தமிழில் ரஜினி, கமல், தனுஷ் படங்களை தயாரித்து வரும் லைக்கா நிறுவனம் பிரான்ஸ் நாட்டில் நிதி மோசடி மற்றும் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக அந்நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.


 


அதனை லைக்கா மறுத்துள்ளது. இது தொடர்பாக லைக்கா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
 
கடந்த இரு தினங்களாக லைகா மொபைல், லைகா தயாரிப்பு நிறுவனம் குறித்து தமிழ்நாட்டு ஊடகங்களில் சில செய்திகள் வெளியாகி வருகின்றன. அவை முற்றிலும் தவறான செய்தி.
 
லைகா மொபைல் நிறுவனம் 21 நாடுகளில் தொலைதொடர்பு சேவை அளித்து வருகிறது. அதுவும் குறிப்பாக அதிக செலவு வைக்கும் தொலைதொடர்பு நிறுவனங்களின் சேவையைப் பெற முடியாதவர்களுக்காக நாங்கள் சேவை வழங்கி விருகிறோம்.
 
லைகா தயாரிப்பு நிறுவனம் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. திரைப்படங்கள் தயாரிப்பு மற்றும் விநியோகத்தில் இந்நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
 
தற்போது நாங்கள் பிரபல தமிழ் நடிகர்களை வைத்து திரைப்படங்களை தயாரித்துக் கொண்டிருக்கிறோம். ரஜினிகாந்த், கமல்ஹாசன், அக்‌ஷய்குமார், தனுஷ், ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி ஆகியோருடன் பணியாற்றுகிறோம். இயக்குநர் ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோருடனும் தொடர்பில் இருக்கிறோம்.
 
எங்கள் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் திட்டவட்டமாக மறுக்கிறோம். கடந்த 10 ஆண்டுகளாக சட்டபூர்வமாக இயங்கிவருகிறது. எங்கள் நிறுவனத்துக்கு எதிராக சட்டப்படி எந்த குற்றச்சாட்டும் இல்லை. பிரான்ஸ் நாட்டு அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
 
- இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.