வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: திங்கள், 12 ஜூன் 2017 (16:17 IST)

ஒருவழியாக சூர்யா பிறந்தநாளில் தானா சேர்ந்த கூட்டம் பட டீசர் வெளியீடு!

நடிகர் சூர்யா தற்போது நடித்துவரும் படம் தானா சேர்ந்த கூட்டம். ஆக்‌ஷன் திரில்லர் கதையில் தயாராகி வரும் இந்த படத்தை நானும் ரெளடி தான் படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார். சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும்  இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

 
இதனை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ், ரம்யாகிருஷ்ணன், செந்தில், ஆர்.ஜே.பாலாஜி ஆனந்தராஜ் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறிதி கட்ட பணிகள் நடந்து வருகிறது. இருந்தாலும் இப்படத்தின் பர்ஸ்ட்லுக்,  டீசர் என எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
 
இந்நிலையில் வருகிற ஜூலை 23-ஆம் தேதி சூர்யாவின் பிறந்தநாள் என்பதால் அன்றைய தினம் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் டீசர் வெளியாகும் என்று சூர்யா தரப்பிலிருந்து செய்தி வெளியாகி இருக்கிறது.