திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 27 ஜூன் 2022 (18:00 IST)

திமுக அரசுக்கு திரைப்படத் தொழிலாளர்கள் கோரிக்கை!

Shooting
கடந்த 2008 ஆம் ஆண்டு, திரைப்படத்துறையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சின்னத்திரையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சென்னை அருகே பையனூரில் குடியிருப்பு ஸ்டுடியோ, திரையரங்கம், தொழில் நுட்ப வளாகம் ஆகியவற்றை அமைக்க திமுக ஆட்சியின்போது,99 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அங்கு முன்னாள் முதல்வர் கலைஞர் பெயரில் ஸ்டுடியோ, திரையரங்கம், திரையரங்கம், திரைப்பட கலைஞர்கள், எடிட்டர், ஒளிப்பதிவாளர், உள்ளிட்ட தொழில் நுட்பக் கலைஞர்கள, துணை நடிகர்களுக்கு என குடியிருப்புகளும் உருவாக்கப்பட்டது.

ஆனால், மேற்கொண்டு அங்கு எந்த  நவடடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என என்பதால், திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தை நிறைவேற்றக் வேண்டுமென திரைத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.