1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 8 ஜூலை 2021 (15:15 IST)

மைனர் பெண்ணை பாலியல் வல்லுறவு செய்த திரைப்பட இயக்குனர்!

ஆன்லைன் வகுப்புக்காக அந்த பெண்ணுக்கு அவரின் பெற்றோர் ஸ்மார்ட் போன் வாங்கி கொடுத்துள்ளனர்.

ஆனால் சிறுமியின் பெற்றோர் இருவருமே போலிஸில் பணிபுரிவதால் அவர்களால் குழந்தையுடன் அதிக நேரத்தை செலவிட முடியவில்லை. இதனால் அந்த பெண் படிப்பை விட சமூகவலைதளங்களில் அதிக ஆர்வமாக இருந்துள்ளார்.

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் மூலமாக அறிமுகமான சமுதாயம் என்ற படத்தின் இயக்குனர் சத்யபிரகாஷ் அந்த பெண்ணுக்கு நடிப்பு ஆசை காட்டி பழகியுள்ளார். பின்னர் மதுரவாயலில் உள்ள தனது வீட்டுக்கு வரவழைத்து அவரிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்துள்ளார். அதன் பின்னர் சிறுமியிடம் திருமனம் செய்துகொள்ளும்படி கட்டாயப்படுத்தியுள்ளார்.

இதையறிந்த சிறுமியின் பெற்றோர் போலிஸில் புகாரளிக்க அவரை போக்ஸோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.