1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 30 மே 2021 (15:47 IST)

பால் வாக்கர் சாகசம் செய்த கார் ஏலம்! – பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்படமான ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் படத்தில் பயன்படுத்திய கார் ஒன்று அடுத்த மாதம் ஏலத்திற்கு வர உள்ளது.

உலகம் முழுவதும் உள்ள ஹாலிவுர் ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்படும் ஆக்‌ஷன் படங்களில் முக்கியமானது ஃபாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் படங்கள். 2001 தொடங்கி இதுவரை பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் 9 பாகங்கள் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் வெளியான ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் கொரோனா காரணமாக சீனா உள்ளிட்ட சில நாடுகளில் மட்டுமே வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் படங்களில் முன்னதாக நடித்து வந்த, விபத்தில் மரணமடைந்த நடிகர் பால் வாக்கர் திரைப்படங்களில் பயன்படுத்திய டொயோட்டா சுப்ரா வகை கார் ஒன்று அடுத்த மாதம் ஏலத்துக்கு வர உள்ளது. ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் படத்தில் இந்த வகை கார்கள் மொத்தமாக 8 பயன்படுத்தப்பட்டிருந்தது. பால் வாக்கர் பயன்படுத்திய கார் என்பதால் ஏலம் அதிக தொகைக்கு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.