முன்னணி நடிகையின் .சினிமா ஷூட்டிங்கை நிறுத்திய விவசாயிகள்!

Sinoj| Last Modified வியாழன், 14 ஜனவரி 2021 (15:56 IST)

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடித்து வரும் புதிய படமான குட்லக் ஜெர்ரி படத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து படப்பிடிப்பை நிறுத்தினர். இதனால் பரப்பரப்பு ஏற்பட்டது.

மறைந்த நடிகை ஸ்ரீதேவி போனி கபூரின் மகள் ஜான்வி கபூர். இவர்
தடக், கோஸ்ட் ஸ்டோரிஸ், அங்கிரேஸி மீடியம் , குஞ்சன் கசசேனா உள்ளிட்ட பல படங்களில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இவர் தற்போது குட்லக் ஜெர்ரி என்ற படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தை சித்திக் சென்குப்தா இயக்க, இப்படத்தை இயக்குநர் ஆனந்த் ராய் தயாரிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் பஞ்சாப் மாநிலத்திலுள்ள பஸ்சில் பதானா ந்கரில் நடைபெற்று வந்தது. இதைப் பார்த்த விவசாயிகள் படப்பிடிப்பை நிறுத்துமாறு கூறி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதுகுறித்துக் கூறிய விவசாயிகள், மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராடிவரும் விவசாயிகளுக்கு எந்தப் பாலிவு நடிகர்களும் ஆதரவு தரவில்லை. என்று கூறி இப்படக்குழுவினருடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பேசிய இயக்குநர், விவசாயிகளுக்கு ஆதரவாக நடிகை கான்வி கபூர் அறிக்கை வெளியிடுவார் என்று கூறி அவர்களைச் சமாதானம் செய்தார். பிறகு விவசாயிகள் கலைந்து சென்றனர். இதனால் 3 மணிநேரம் படப்பிடிப்பு தடைபட்டது.இதில் மேலும் படிக்கவும் :