நாளைக்கு பிறந்தநாளுக்கு இன்றே ட்ரெண்டிங்! – அலப்பறை செய்யும் விஜய் ரசிகர்கள்!

Prasanth Karthick| Last Modified ஞாயிறு, 21 ஜூன் 2020 (13:15 IST)
நாளை விஜய் பிறந்தநாளை முன்னிட்டு இன்றே அது தொடர்பான ட்ரெண்டிங்கை தொடங்கியுள்ளனர் அவரது ரசிகர்கள்.

தமிழ் சினிமாவின் முக்கிய அங்கமாக மாறிவிட்ட நடிகர் விஜய்யின் பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது. ஆண்டுதோறும் விஜய்யின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் பல்வேறு விதங்களில் கொண்டாடி வருகின்றனர். ப்ளக்ஸ், பேனர் கட்டுதல், அன்னதானம், ரத்த தானம் போன்றவற்றை அளித்தல், கேக் வெட்டுதல், பட்டாசு வெடித்தல் முதற்கொண்டு பழைய விஜய் படங்களை சிறப்பு அனுமதியுடன் திரையரங்குகளில் வெளியிடுதல் வரை பலத்தரப்பட்ட கொண்டாட்டங்களை விஜய் ரசிகர்கள் செய்துள்ளனர்.

ஆனால் இந்த முறை கொரோனா காரணமாக இந்த கொண்டாட்டங்களுக்கு வாய்ப்பில்லாத சூழல் உள்ளது. நடிகர் விஜய்யும் தனது பிறந்தநாளை கொண்டாடுவதாக கூட வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் #THALAPATHYBday என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இந்த ஹேஷ்டேகின் கீழ் பல வீடியோக்களும், புகைப்படங்களும் ட்ரெண்டாகி வருகின்றன.இதில் மேலும் படிக்கவும் :