திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 13 பிப்ரவரி 2021 (11:09 IST)

ரஜினிக்குப் பிறகு விஜய்சேதுபதிக்கு ஜப்பானில் ரசிகர்கள்!

மாஸ்டர் படத்தில் விஜய்யை விட விஜய் சேதுபதியின் நடிப்பு எல்லோருக்கும் பிடித்திருப்பதாக கருத்துகள் எழுந்தன.

மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதி பல இடங்களில் விஜய்யை விட அதிகமாக ஸ்கோர் செய்தார். இதனால் விஜய் ரசிகர்களே கூட விஜய் சேதுபதியின் புகழ்பாட தொடங்கினர். இந்நிலையில் தமிழைத் தவிர பல மொழிகளில் இருந்தும் விஜய் சேதுபதிக்கு வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில் உள்நாட்டில் மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலும் இப்போது விஜய் சேதுபதிக்கு அதிகளவில் ரசிகர்கள் உருவாகியுள்ளனர். மாஸ்டர் படத்தை ஜப்பானில் ரிலிஸ் செய்துள்ள நிலையில் அங்கும் விஜய்யை விட விஜய் சேதுபதிக்கே அதிக வரவேற்பு கிடைத்துள்ளதாம். அவரின் முகம் பதித்த டி ஷர்ட்கள் அணிந்துவந்து பலரும் ஆட்டம் ஆடி அவரின் காட்சிகளை ரசிக்கின்றனராம்.

Source வலைப்பேச்சு