ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : சனி, 9 ஜனவரி 2021 (15:47 IST)

பிரபல இளம் நடிகர் தற்கொலை… திரையுலகினர்,ரசிகர்கள் அதிர்ச்சி

சமீபத்தில் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சோகம் ஆறுதற்குள் இன்னொரு தென்னிந்திய நடிகர் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் பிரபல டிவி சீரியல் நடிகர் சமீர் ஷர்மா தனது இல்லத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். 
 
மும்பையைச் சேர்ந்த டிவி நடிகர் சமீர் நேற்று இரவு தனது இல்லத்தில்  உள்ள சமையலறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
 
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையில் சமீரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
 
சமீர் இறந்து இரண்டு நாட்கள் ஆகியிருக்கலாம் என தெரிகிறது. மேலும் வீட்டில் துர்நாற்றம் வீசியதால் அருகில் உள்ளவர்கள் ஜன்னலைத் திறந்து பர்த்தபோது, சமீர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்ததாகக் கூறியுள்ளனர்.

இதனால்  திரையுக்லகினர்,ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.