பிரபல இளம் நடிகர் கழிவறையில் மர்ம மரணம்.....ரசிகர்கள் அதிர்ச்சி
பாலிவுட் இளம் நடிகர் ஆதித்யா சிங் இன்று கழிவறையில் மரணம் அடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட் சினிமாவில் இளம் நடிகர் ஆதித்யா சிங் ராஜ்புத். இவர் மாடலிங் துறையில் ஈடுபட்டுள்ளதுடன், நடிப்பு தொழில் ஒருங்கிணைப்பாளராகவும், விளம்பரங்களிலும் நடித்து வந்தார்.
இவர் இதுவரை 300க்கும் அதிகமான விளம்பர படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில், மும்பை நகரில் அந்தேரி என்ற பகுதியில் உள்ள 11 வது மாடியில் வசித்து வந்த அவர் கழிவறையில் சடலமாகக் கிடந்தார்.
நடிகர் ஆத்யாவை முதலில் அவரது நண்பர் பார்த்து, அதிர்ச்சியடைந்து, காவலாளி உதவியுடன் அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்ததாக கூறிவிட்டனர்.
மேலும், நடிகர் ஆதித்யா அதிகளவில் போதைப் பொருள் எடுத்ததன் காரணமாக உயிரிழப்பு நேர்ந்திருக்கலாம் என்று மருத்துவமனை வட்டாரத்தில் வெளியாகும் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரது மறைவுக்கு சினிமாத்துறையினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் கூறி வருகின்றனர்.