வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 25 மே 2022 (15:48 IST)

பிரபல பாடகி சங்கீதா சடலமாக மீட்பு...ரசிகர்கள் அதிர்ச்சி

sangetha
காணாமல் போன ஹரியானா பாடகி சங்கீதாவின் உடல் 12    நாட்களுக்குப் பிறகு பைரோன் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ஹாரியானாவைச் சேர்ந்த பிரபல பாடகி சங்கீதா  சில நாட்களுக்கு முன் காணாமல் போனார். இதுகுறித்து அவரது பெற்றோர்  போலீஸில் புகாரளித்து, தீவிரமாகத் தேடி வந்த நிலையில், இன்று காணாமல் போன ஹரியான பாடகி சங்கீதாவின் உடல் 12    நாட்களுக்குப் பிறகு பைரோன் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சங்கீதாவின் உடலை பிரேத பரிசோதனை செய்த பிறகு, இந்த வழக்கு டெல்லி போலீஸுக்கு மாற்றப்படும் என கூறப்பட்டுள்ளது.