1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 20 பிப்ரவரி 2024 (19:00 IST)

தமிழில் அறிமுகமாகும் பிரபல மலையாள இயக்குநர்!

anjali menon
பெங்களூர் டேஸ் படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் அஞ்சலி மேனன் அடுத்த படத்தைத் தமிழில் இயக்கவுள்ளார்.
 
மலையாள சினிமாவின் பிரபல இயக்குனர் அஞ்சலி மேனன். இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான கேரள கபே என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
 
அதன்பின்னர், மஞ்சாடிக்குரு என்ற படத்தை இயக்கினார். இதையடுத்து, உஸ்தாத் ஓட்டல் படத்திற்கு கதாசிரியராக ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றார்.
 
கடந்த 2014 ஆம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான படம் பெங்களூர் டேஸ். மலையாள மொழியில்  உருவான இப்படத்தில் துல்கர் சல்மான், பகத் பாசில், நஸ்ரியா நசீம், பார்வதி மேனன், இஷா தல்வார், நித்யா மேனன் உள்ளிட்டோர் முன்னணி வேடங்களில் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
 
இந்த நிலையில் பெங்களூர் டேஸ் படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் அஞ்சலி மேனன் அடுத்த படத்தைத் தமிழில் இயக்கவுள்ளார் என தகவல் வெளியாகிறது.
 
இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.