திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 6 ஏப்ரல் 2022 (20:37 IST)

பிரபல நகைச்சுவை நடிகர் மரணம்..ரசிகர்கள் அதிர்ச்சி

dhanasekar
தமிழ் சினிமாவில்  நகைச்சுவை நடிகராக இருந்த தனசேகரன் என்பவர் மாரடைப்பால்  உயிரிழந்தார்.
 
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகேயுள்ள அல்லி நாயக்கன் பாளையத்தில் வசித்து வந்தவர் தனசேகரன்.  (43). இவர்       குள்ளமான உருவமாக இருந்தாலும் தன்  நகைச்சுவையாம் மக்களைக் கவர்ந்தார்.
 
இவர் வெங்காயம், ஐம்புலன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
 
நேற்று முன் தினம்  திருச்செங்கோடு திருவிழாவிற்குச் சென்று வந்த அவர்  நேற்று காலை ஊருக்குத் திரும்பினார். பின்பு சாப்பிட்டு படுத்தவர்  எழுந்தரிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
 
இதனால், அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மருத்துவரை அழைத்து வந்தனர். தனசேகரை பரிசோதித்த மருத்துவர் மாரடைப்பால் அவர் உயிரிழந்ததாக தெரிவித்தார்.  திரைத்துறையினர்  அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.