1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 28 ஜனவரி 2023 (14:57 IST)

''ஜெயிலர்'' படத்தில் இணைந்த பாலிவுட் பிரபல நடிகர்

jailer
ரஜினியின் ஜெயிலர் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் இணைந்துள்ளார்.
 

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் ”ஜெயிலர்”.

இப்படத்தில்  ரஜினியோடு தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி ஆகியோர் நடிக்கின்றனர்.

இவர்களை தவிர ரம்யா கிருஷ்ணன் மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் சிவகுமார், மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன்லால், தெலுங்கு சினிமா காமெடி நடிகர் சுனில் ஆகியோர்  இந்த படத்தில் இணைந்துள்ளனர்.

இந்த படத்தின் ஷூட்டிங்  வேகமாக நடந்து வரும் தற்போது, இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர்  ஜாக்கி ஷெராப் நடித்துள்ளார்.

இதனால், இப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.