செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinojkiyan
Last Modified: சனி, 21 டிசம்பர் 2019 (18:08 IST)

ஆன்லைனில் பல ஆயிரம் பணத்தை இழந்த பிரபல நடிகை !

தமிழில் சித்திரம் பேசுதடி - 2 படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை பிரியங்கா பானர்ஜி. இவர் தந்து செல்போன் மூலமாக ரூ.32 ஆயிரம் பணத்தை இழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரியங்கா சமீபத்தில் தனது செல்போன் மூலம் ஆன்லைனில்  குளிர்பானம் ஆர்டர் செய்துள்ளார். அப்போது அவரது செல்பேசுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது, அதில் பேசிய நபர், பணம் கட்ட வேண்டும் என கூறி அவரது வங்கிக் கணக்கையும் பெற்றுள்ளார். 
 
இதையடுத்து, வங்கிக் கணக்கில் இருந்து ரூ.22,000 எடுக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர், அதே நபர் அவருக்கு திரும்பவும் போன் செய்து, தவறுதலாக பணம் எடுக்கப்பட்டு விட்டது உங்கள் கூகுள் எண்ணைக் கூறவும் என கேட்டுள்ளார். அதை நடிகை கொடுத்ததும் அவரது வங்கில் மீண்டும் ரூ.12 ஆயிரம் எடுக்கப்பட்டது. அதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்துகொண்ட பிரியங்கா இதுகுறித்து, போலீஸில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.