1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 5 பிப்ரவரி 2019 (09:35 IST)

6 கோடி கொடுத்தா கால்ஷீட்: கிராக்கி பண்ணும் நம்பர்-1 நடிகை

6 கோடி கொடுத்தால் தான் நயன்தாராவின் கால்ஷீட்டை பெற முடியும் என அவர் மேனேஜர் கூறுவதாக செய்தி வெளியாகியுள்ளது.
 
தமிழில் நம்பர் 1 நடிகையாக வலம் வரும் நயன்தாராவுக்கு தமிழ் சினிமாவில் மட்டும் அல்லாமல், தெலுங்கிலும் டாப் மார்க்கெட் உள்ளது. இவரது படங்கள் பெரிய நடிகர்களின் படங்களுக்கு நிகராக வசூலை வாரி குவிக்கின்றன. இதனால் இவரை தேடி பல இயக்குனர்கள் குவிந்து வருகிறார்கள். இவரது சம்பளம் கடந்த வருடம் ஒரு படத்திற்கு 4 கோடியாம். 
 
மார்க்கெட் உயர்ந்துவிட்டதாலும், தன்னை வைத்து படம் எடுப்பவர்கள் அதிக லாபத்தை பார்ப்பதாலும் நயன்தாராவின் சம்பளம் தற்போது 6 கோடியாக உயர்ந்துவிட்டது என அவர் மேனேஜர் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.