செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 4 ஜூன் 2021 (18:32 IST)

பிரபல நடிகைக்கு ரூ.20 லட்சம் அபராதம்...நீதிமன்றம் அதிரடி

சமீபத்தில் இந்தி நடிகை ஜூஹி சால்வா டெல்லி உயர் நீதி மன்றத்தில் இந்தியாவில் 5ஜி சேவையை அமல்படுத்த தடை வேன்உம் என மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று டெல்லி உயர நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகை ஜூஹி சாவ்லா தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

மேலும், விளம்பரத்திற்காக அவர் இந்த வழக்கின் மனு தாக்கல் செய்துள்ளதாகக் கூறி ரூ.20 லட்சம் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அவரது ரசிகர்களுக்கு  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை ஜூஹி சாவ்லா பல முன்னணி நடிகர்களின் படஙக்ளில் ஹீரோயினாக நடித்தவர் மற்றும் குர்குரே போன்ற விளம்பரங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.