1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : சனி, 3 ஜூலை 2021 (18:14 IST)

நடராஜனுக்கு முருகர் சிலையைப் பரிசளித்த பிரபல நடிகர் !

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர் யோகிபாபு. இவர் தற்போது விஜய்யுடன் பீஸ்ட், சிவகார்த்திகேயனுடன் டாக்டர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான மண்டேலா படம் முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் சமீபத்தில் ஆஸ்திரேலியாவுடனான டி-20 மற்றும் ஒருநாள் தொடரில் தனது பந்துவீச்சில் எதிரணியிரனரைத் தி்ணறடித்து இந்திய அணி வெற்றி பெறக் காரணமாக இருந்த தமிழக வீரர் நடராஜனுக்கு யோகிபாபு இன்று ஒரு  முருகர் சிலையைப் பரிசளித்துள்ளார்.

இதுகுறித்த புகைப்படத்தை நடிகர் யோகி பாபு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது.