திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 3 ஜனவரி 2022 (20:34 IST)

பிரபல நடிகரின் மகன் மீது போலீஸில் புகார் !

தமிழ்  சினிமாவில் பிரபல நடிகர் தம்பி ராமையா.  இவர் பிரபல நடிகர்களுடன் துணை நடிகராக நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகர் தம்பி ராமையா மற்றும்  அவரது மகன் உமாபதி மீது  சென்னை பெரு நகர காவல் ஆணையம் அலுவலகத்தில் தயாரிப்பாளர் சவரணன் புகார் மனு அளித்துள்ளார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:  கடந்த 2015  ஆண்டு    நான் ஒரு படம் எடுக்க தீர்மானித்த போது, தன் மகனை நடிகராக  நடிக்கவைப்பதாகவும் அதற்கான அனைத்துப் பொறுப்புகளையும் தானே ஏற்றுக் கொள்வதாகவும் தம்பி ராமையா என்னிடம் கூறினார்.  அதன்படி ஜூன் மாதம் படடத்தை ஆரம்பித்தேன்.  இப்படத்தை 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ரிலீஸ் செய்ய உத்தேசித்தேன். ஆனல் ஹீரோவாக நடித்து வந்த உமாபதியை பலமுறை அழைத்தும் அவர் வரவில்லை. அவரும்  தந்தை தம்பி ராமையாவும்    சேர்ந்து என்னை நஷ்டமடைய வைக்க வேண்டுமென செயல்படுகின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.