ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 18 மார்ச் 2023 (23:24 IST)

ஹாலிவுட் பிரபல நடிகர் லான்ஸ் ரெட்டிக் மறைவு...ரசிகர்கள் அதிர்ச்சி

lance reddick
ஹாலிவுட் சினிமாவின் பிரபல நடிகர் லான்ஸ் ரெட்டிக் இன்று காலமானார்.

ஹாலிவுட் சினிமாவின் பிரபல நடிகர் லான்ஸ் ரெட்டிக். இவர், ஹாலிவுட்டில் மட்டுமின்றி, ஓடிடில், வெல் சீரிஸ் உள்ளிட்ட தொடர்களில் நடித்து  ரசிகர்களைக் கவர்ந்தவர் ஆவார்.

ஹாலிவுட்டில் தனிப்பெரும் ரசிகர்களைக் கொண்டிருக்கும் ஜான்விக் படங்களில் லான்ஸ் ரெட்டி நடித்திருப்பார். அவரது நடிப்பு பல நாட்டு ரசிகர்களையும் கவர்ந்தது.

அதேபோல், பிரபல தொலைக்காட்சியில் அவர் நடிப்பில் வெளியான தி வயர் நிகழ்ச்சியும் ரசியர்களின் பொழுதுபோக்கு அம்சமான நிகழ்ச்சியாக அமைந்தது.

நடிப்பு, இசை என்று பன்முக கலைஞராக இருந்த லான்ஸ் ரெட்டிக் இன்று லாஸ்  ஏஞ்சல்ஸில் உள்ள தன் வீட்டில் காலமானதாக அவரதுகுடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் லான்ஸ் ரெட்டிக் இயற்கையான முறையில் மரணமடைந்தார் என்று அவரது குடும்ப உறுப்பினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். அவருகு வயது 60 ஆகும்.

ஹாலிவுட் சினிமாத்துறையினர், உலகெங்கிலும் உள்ள ரசிகர்களும் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.