செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : வியாழன், 25 பிப்ரவரி 2021 (00:37 IST)

நயன்தாரா பட இயக்குநரின் பெயரில் போலி கணக்கு !

நயன்தாரா நடித்த மாயா படத்தை இயக்கியவர் அஸ்வின் சரவணன். இவரது பெயரில் டுவிட்டர் பக்கத்தில் போலி கணக்கு துவங்கப்பட்டுள்ளதக அவரே தெரிவித்துள்ளார்.

நடிகை நயன் தாரா நடிப்பில் வெளியான மாயா, டாப்சி நடித்த கேம் ஓவர் உள்ளிட்ட படங்களை இயக்கிவர் அஸ்வின் சரவணன். இவர் இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு  இயக்கிய படம் இறவாக் காலம். இப்படத்தில் ஹீரோவாக எஸ்.ஜே.சூர்யா நடித்திருந்தார்.

இந்நிலையில் அஸ்வின் சரவணகுமார் தனது பெயரில் போலி அக்கவுண் உருவாக்கி மோசடியில் ஈடுபடுவதாகப் புகார் தெரிவித்துள்ளார்.  மேலும் தன்பெயரில் இன்ஸ்டா பக்கத்தில் ஒருவர் போலி கணக்கை துவங்கி மாயா திரைப்பட இயக்குநர் தான் என்றும் கூறியுள்ளதாக அஸ்வின் சரவணன் எச்சரித்துள்ளார். இதுகுறித்து அஸ்வின் கூறும்போது, தன் பெயரில் போலி கணக்கை துவக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வழக்கறிஞர்களிடன் ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் இதுபோன்ற நபர்களிடம் ஏமாற வேண்டாம் என எச்சரித்துள்ளார்.