'மெர்சல்' படத்தால் மெர்சலான நாசர் மகன்
இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் 'மெர்சல்' திரைப்படம் உருவாகி வரும் நிலையில் சமூக இணையதளங்களில் எங்கு பார்த்தாலும் 'மெர்சல்' டிரெண்டிங்கில் உள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் சங்க தலைவர் நாசர் வீட்டிற்கு இளையதளபதி விஜய் சென்று வந்தார் என்பதை பார்த்தோம். விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த நாசர் மகன் ஃபைசல் உடல்நிலை குறித்து விசாரிக்கவே விஜய் அவருடைய வீட்டிற்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் விஜய்யுடன் செல்பி எடுத்து கொண்டு தனது நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றி கொண்ட ஃபைசல், தற்போது அவருடைய காரின் பின் கண்ணாடியில் மெர்சல் படத்தின் டைட்டிலை வரைந்துள்ளார். மெர்சல் படத்தால் மெர்சலாகி போன ஃபைசல் இவ்வாறு வரைந்துள்ளதாக கூறப்படுகிறது.