1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Modified: ஞாயிறு, 29 ஜனவரி 2017 (19:40 IST)

உயிருக்கு போராடிய நடிகர்கள்: நடிப்பு என மீட்புக்குழு வேடிக்கை

மலையாள படப்பிடிப்பில் நடிகர் பஹத் மற்றும் நடிகை நமிதா பிரமோத் ஆகியோர் கடல் அலையில் உயிருக்கு போராடியதை, மீட்புக்குழு நடிப்பு என வேடிக்கை பார்த்துள்ளனர்.


 

 
மலையாள திரையுலகின் பிரபல நடிகர் பஹத் மற்றும் நமிதா பிரமோத் ரோல் மாடல்ஸ் என்ற படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் ஒரு காட்சி கடலில் படம் பிடிக்கப்பட்டது. நமிதா, பஹத்தை கடலுக்குள் அழைத்துச் செல்லுவது போல் படமாக்கப்பட்டது.
 
இருவரும் வாட்டர் பைக்கில் செல்லும்போது பேரலையில் சிக்கி தவித்தனர். இதை மீட்புக்குழுவினர் நடிப்பு என்று வேடிக்கை பார்த்துள்ளனர். படக்குழுவினர் காப்பாற்றும்படி சத்தம் போட்ட பின்னர் நடிகர்கள் இருவரும் காப்பற்றப்பட்டனர்.