1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 19 ஆகஸ்ட் 2020 (12:15 IST)

குஷ்புவுக்கு ஏற்பட்ட திடீர்க்காயம்: டுவிட்டரில் அவரே வெளியிட்ட புகைப்படம்

குஷ்புவுக்கு ஏற்பட்ட திடீர்க்காயம்
நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருந்தாலும் கடந்த சில நாட்களாக பாஜகவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. குறிப்பாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமித்ஷா விரைவில் குணமாக வேண்டும் என்று அவர் பதிவு செய்த ட்வீட் சர்ச்சைக்குள்ளானது என்பதும், அவர் விரைவில் பாஜகவில் இணையபோவதாக வதந்தி கிளம்பியது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் திடீரென குஷ்பு தன் கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் இன்று காலை தனது கண்ணில் கத்தியால் காயம் ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து மருத்துவமனை சென்று கண்ணுக்கு கட்டுப் போடப்பட்டு உள்ளதாகவும் குஷ்பு தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்
 
மேலும் கண்ணில் கட்டுபோடப்பட்ட ஒரு புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து குஷ்பு விரைவில் நலமாக வேண்டும் என்று நெட்டிசன்களும் அவரது ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் 
 
குஷ்பு கண்ணில் காயம் பட்டு கட்டுடன் உள்ள புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது