பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பரணி நிகழ்ச்சி பற்றி கூறியது!

Sasikala| Last Modified செவ்வாய், 11 ஜூலை 2017 (18:40 IST)
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் நடக்கும் திருப்பங்களை பார்க்கும் போது அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற  ஆவல் வந்து விடுகிறது. அண்மையில் இந்த நிகழ்ச்சியில் கஞ்சா கருப்புவை தொடர்ந்து பரணி வெளியேற்றப்பட்டார்.


பிக் பாஸ் வீட்டில் பரணி மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தார். மேலும் விதிமுறைகளை மீறியதாக கூறி வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் வீட்டில் அனைவரும் சேர்ந்து அவரை ஒதுக்க, அவர் வீட்டை விட்டு ஓடும் நிலைக்கு வந்துவிட்டார். இதனால் நிகழ்ச்சியை பார்த்தவர்கள் அனைவருமே நேற்று பரணி மீது மிகுந்த அனுதாபம் கொண்டனர்.

இந்நிலையில் பிரபல பத்திரிகை  அவரை தொடர்பு கொண்டு பேசுகையில் ‘நான் தற்போது நன்றாக இருக்கிறேன், என்னை பார்க்காமல் குழந்தைகளுக்கு  உடல்நிலை சரியில்லாமல் போனது. என்னை பார்த்ததும் சந்தோஷத்தில் துள்ளி குதித்தனர், மேலும், காலை முருகன் கோவிலுக்கு சென்றேன்.
 
மக்கள் பலரும் வந்து என்னை நலம் விசாரித்தார்கள், சந்தோஷமாக இருந்தது, பிக்பாஸில் என்ன நடந்தது என்பது குறித்து 100  நாட்களுக்கு பேசக்கூடாது என்றும், அக்ரீமெண்டில் இருப்பதால் 100 நாட்கள் எந்த ஒரு செய்தியையும் வெளியே  சொல்லக்கூடாது என்று கூறியுள்ளார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :