1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Updated : திங்கள், 19 ஜூன் 2023 (07:32 IST)

சார்பட்டா பரம்பரையைச் சேர்ந்தவரும் நடிகருமான பாக்ஸர் ஆறுமுகம் காலமானார்!

சென்னையில் 1980 கள் வரை தொழில்முறை குத்துச்சண்டை வெகு பிரபலமாக நடந்து வந்தது. அதில் பல இளைஞர்கள் ஈடுபட்டு வந்தனர். அதற்காக பெரிய அளவில் ரசிகர் கூட்டமும் இருந்தது. ஆனால் ஒரு கட்டத்துக்குப் பிறகு அதில் அரசியல் கலந்து அதன் வண்ணம் மாற, ஒரு கட்டத்தில் அதற்கு தடைவிதிக்கப்பட்டது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான பா ரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை எனும் திரைப்படத்தில் சென்னையின் குத்துச்சண்டை வரலாறு காட்டப்பட்டி இருக்கும். அதில் காட்டப்படும் குத்துச்சண்டை பரம்பரைகளில் ஒன்றான சார்பட்டா பரம்பரையைச் சேர்ந்த வீரர் பாக்ஸர் ஆறுமுகம். அவர் பல போட்டிகளில் விளையாடி வெற்றி பெற்றவர்.

அவரை ஆரண்யகாண்டம் திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகப்படுத்தினார் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா. அதன் பின்னர் சில திரைப்படங்களிலும் நடித்த அவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்தார். இந்நிலையில் தற்போது அவர் காலமாகியுள்ளார். அவருக்கு வயது 72. பல போட்டிகளில் வென்று சாம்பியன் பட்டம் வென்ற அவரின் இறப்பு குத்துச்சண்டை ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.