இன்று முதல் சன் டிவியில் ‘எதிர்நீச்சல் 2’.. பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
சன் டிவியில் இன்று முதல் எதிர்நீச்சல் 2 சீரியல் ஒளிபரப்பாக உள்ளதை அடுத்து, ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருப்பதாக கூறப்படுகிறது.
எதிர்நீச்சல் முதல் பாகம் அனைத்து தரப்பிலும் வரவேற்பை பெற்ற நிலையில், திடீரென எதிர்பாராமல் முடிவுக்கு வந்தது அனைவருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில், முதல் பாகத்தை இயக்கிய திருச்செல்வம், இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகும் என்று கூறிய நிலையில், இன்று முதல் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளதை அடுத்து, ரசிகர்கள் ஆர்வத்துடன் இந்த சீரியலை பார்க்க உள்ளனர்.
இரண்டாம் பாகம் முற்றிலும் வேறுபட்ட கதாபாத்திரங்களுடன் அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல் பாகத்தில் இருந்த கதாபாத்திரங்களே இரண்டாம் பாகத்திலும் இருப்பதாக திருச்செல்வம் அறிவித்தார். ஆனால் அதே நேரத்தில், நாயகி மதுமிதாவுக்கு பதிலாக பார்வதி வெங்கட்ராமன் இணைந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அய்யனார் துணை என்ற தொடரில் நடிக்க மதுமிதா ஒப்பந்தமாகியுள்ளதால், எதிர்நீச்சல் 2 சீரியலில் அவர் நடிக்கவில்லை என்று கூறப்பட்டது. முதல் பாகத்தில் நடித்த கனிகா, பிரியதர்ஷினி, ஹரிபிரியா உள்ளிட்டோர் இந்த தொடரில் நடிக்கின்றனர்.
ஏற்கனவே, இந்த தொடரின் முன்னோட்ட வீடியோக்கள் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், இன்று முதல் தினமும் இரவு 9.30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran