1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Suresh
Last Updated : புதன், 2 செப்டம்பர் 2015 (14:58 IST)

ஒரே படத்தில் பட்டப்பெயரை பாராட்டாக மாற்றிய மோகன் ராஜா

மோகன் ராஜா என்கிற ஜெயம் ராஜா தனி ஒருவன் படத்தையும் சேர்த்து எட்டுப் படங்கள் இயக்கியிருக்கிறார். அதில் ஏழு ரீமேக் படங்கள்.


 

 
மோகன் ராஜா முதலில், மலையாளப் படம், தென்காசிப்பட்டணத்தை தெலுங்கில் ரீமேக் செய்தார். பிறகு தமிழில் ஜெயம் படம்.
 
ஜெயம் படத்திலிருந்து வேலாயும்வரை அவர் இயக்கிய அனைத்துமே ரீமேக் படங்கள். அதனால், ரீமேக் ராஜா என்றே செல்லமாக அவரை அழைத்து வந்தனர். அந்த பட்டப் பெயரை பஞ்சாக பறக்க வைத்துள்ளது தனி ஒருவன்.
 
மோகன் ராஜாவின் சொந்த கதை, திரைக்கதையில் உருவான இந்தப் படம் பட்டையை கிளப்பி ஓடிக் கொண்டிருக்கிறது. படத்தின் பிற மொழி உரிமையை வாங்க நீ நான் என்று போட்டிப் போடுகிறார்கள். ரீமேக் படங்களை இயக்கி வந்தவரின் படத்தை பிற மொழியில் ரீமேக் செய்ய போட்டாப் போட்டி.
 
இதன் மூலம், ரீமேக் படங்களை மட்டுமே இயக்கத் தெரியும் என்ற விமர்சனத்தை ஒரே படத்தில் உடைத்திருக்கிறார் மோகன் ராஜா. 
 
சாதனைதான்.