Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

எனை நோக்கி பாயும் தோட்டா என்னவானது...?

Sasikala| Last Modified சனி, 11 பிப்ரவரி 2017 (18:09 IST)
சிம்பு, கௌதம் இருவருக்கும்தான் செட்டாகும். ஒரு படத்தை தொடங்கிவிட்டு நாலு படத்தில் கால் வைப்பார்கள். நடிகராக  சிம்புவுக்கு இதனால் அதிக பிரச்சனையில்லை. ஆனால் கௌதம்?

 
கௌதமின் திரைக்கதை மிகமிக மோசம். திரைக்கதையில் மட்டும் அவர் கவனம் செலுத்தியிருந்தால் என்னை அறிந்தால்,  அச்சம் என்பது மடமையடா அனைத்துத் தரப்பினருக்கும் லாபம் சம்பாதித்து தந்திருக்கும். திரைக்கதையில் அவர் காட்டிய அலட்சியத்தால் பலருக்கும் நஷ்டம்.
 
இப்படியொரு வொர்க்கிங் ஸ்டைலில் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தை முடிக்கும் முன் துருவநட்சத்திரம் படத்தை  தொடங்கினார். இரண்டு படம் இருக்கையில் நிவின் பாலி படம் குறித்து பேசி வருகிறார். இந்த அகலக்காலால் எனை நோக்கி  பாயும் தோட்டா முடிவேதும் இல்லாமல் அந்தரத்தில் நிற்கிறது.
 
பவர் பாண்டி, விஐபி 2, வடசென்னை என்று தனுஷின் கவனம் முழுக்க வேறு படங்களில். எனில், எனை நோக்கி பாயும்  தோட்டா எப்போது முடியும்?
 
ம்ஹும்... யாருக்கு தெரியும்.


இதில் மேலும் படிக்கவும் :