திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 17 நவம்பர் 2020 (10:48 IST)

பஞ்சாப் மாநில அடையாள சின்னமாக சோனு சூட் – அறிவித்தது தேர்தல் ஆணையம்!

நடிகர் சோனு சூட் கொரோனா காலத்தில் செய்த உதவிகளால் பாராட்டப்பட்டு வந்த நிலையில் இப்போது அவருக்கு ஒரு பெருமையை சேர்த்துள்ளது இந்திய தேர்தல் ஆணையம்.

கொரோனா காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் முதல் வேலையில்லாத தொழிலாளர்கள் வரை அனைவருக்கும் உதவி செய்து மக்கள் மனதில் ஹீரோவாகியுள்ளார் வில்லன் நடிகர் சோனு சூட். கடந்த 6 மாதங்களாக அவர் செய்த சேவையால் சினிமா நடிகர்கள் மத்தியிலேயே கூட அவருக்கு மரியாதை அதிகமாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் சமூகவலைதளங்கள் மூலமாக தன்னிடம் உதவி கேட்பவர்களுக்கு எல்லாம் செய்துகொடுத்து வருகிறார் சோனு சூட்.

இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் பிறந்த அவரை அம்மாநிலத்தின் அடையாளமாக அறிவிக்க வேண்டும் என்று பஞ்சாப் மாநில தேர்தல் தலைமை அதிகாரி கருணா ராஜூ இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் மூலம் வலியுறுத்தினார். இதையடுத்து இப்போது அவரை பஞ்சாப்பின் அடையாளமாக தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.