Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பிக் பாஸ் முட்டை ஊழல்: பஞ்சாயத்து பண்ணிவிட கமலுக்கு கோரிக்கை வைக்கும் நெட்டிசன்கள்!

பிக் பாஸ் முட்டை ஊழல்: பஞ்சாயத்து பண்ணிவிட கமலுக்கு கோரிக்கை வைக்கும் நெட்டிசன்கள்!

செவ்வாய், 1 ஆகஸ்ட் 2017 (16:05 IST)

Widgets Magazine

நடிகர் கமல்ஹாசன் தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் உள்ளதாக கூறியதை அடுத்து அவருக்கும் அமைச்சர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் இன்று பெரம்பலூர் முட்டை ஊழல் தொடர்பாக டுவீட் செய்துள்ளார்.


 
 
பெரம்பலூரில் உள்ள ஒரு அரசு பள்ளியில், குழந்தைகளுக்கு கொடுக்கும் சத்துணவில் கெட்டுப்போன முட்டைகளை கலந்து ஊழல் செய்ததை, கமல் ரசிகர் நற்பணி மன்றத்தை சேர்ந்தவர்கள் கண்டு பிடித்து அதை தடுத்து நிறுத்தியுள்ளனர்.


 
 
அதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள கமல்ஹாசன்  “பெரம்பலூரில் அம்பலமான முட்டை ஊழல் இயக்கத்திற்கு பெருமையே. எனினும் இயக்க வக்கீல்களின் ஆலோசனைப்படி செயல்படவும். சட்டமீறல் நம் தரப்பில் கூடாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.


 
 
இந்நிலையில் அவரது டுவிட்டரில் நெட்டிசன்கள் மற்றுமொரு முட்டை ஊழல் குறித்து கம்மெண்ட் செய்து வருகின்றனர். நடிகர் கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஒவ்வொரு வாரமும் வார இறுதி நாட்களில் பஞ்சாயத்து செய்து வைக்க வருகிறார் அவர்.


 
 
பிக் பாஸ் ஆரம்பித்ததில் இருந்து அங்கு முட்டை விவகாரத்தில் பிரச்சனை இருந்தவாரே உள்ளது. நடிகர் கணேஷ் வெங்கட்ராம் முட்டை அதிகமாக சாப்பிடுவதாகவும், மற்றவர்களுக்கு கொடுக்காமல் அவர் அதிக முட்டை எடுப்பதாகவும், சில நேரங்களில் அவர் முட்டையை திருடுவதாகவும் பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களால் கூறப்படுகிறது.
 
நடிகர் வையாபுரி பல நேரங்களில் கணேஷ் வெங்கட்ராம் முட்டை அதிகமாக எடுப்பதாக புலம்பியிருக்கிறார். இந்த பஞ்சாயத்து முடியாமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் பெரம்பலூர் முட்டை ஊழல் குறித்து பேசிய கமல் தான் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் உள்ள கணேஷ் வெங்கட்ராமின் முட்டை ஊழல் குறித்து பஞ்சாயத்து பண்ண நெட்டிசன்கள் அவரது டுவிட்டரில் கோரிக்கை வைத்து வருகின்றனர்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

“அப்படிப் பண்ணாதீங்க… ப்ளீஸ்” - வேண்டுகோள் விடுத்த தனுஷ்

தான் அறிவிக்கும்வரை ‘விஐபி 2’ படத்தின் பொய்யான ரிலீஸ் தேதியை யாரும் பரப்ப வேண்டாம் என ...

news

அக்கட தேசத்துக்கே திரும்பிய ‘தல’ மச்சினி

மலையாளம் மற்றும் தமிழ்ப் படங்கள் காலை வாரிவிட்டதால், மறுபடியும் அக்கட தேசத்துக்கே ...

news

விவேகத்தை பாராட்டிய மெர்சல்: இது தல தளபதி ரசிகர்களுக்கு!!

தமிழ் சினிமாவில் அந்த காலத்தவர்களுக்கு எம்ஜிஆர் - சிவாஜி, ரஜினி - கமல் போன்று இந்த ...

news

மக்களை கட்டு கட்டா கட்டிப்புட்டு, மந்திரிங்க கட்டு கட்டா கட்டுறாங்க: டுவிட்டரில் கொந்தளிக்கும் கஸ்தூரி!

சமையல் எரிவாயு மானியம் ரத்த செய்யப்படுவதாக சமீபத்தில் தகவல் பரவி வந்தது. இதனையடுத்து இந்த ...

Widgets Magazine Widgets Magazine