ஷில்பா ஷெட்டி கணவர் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை: என்ன காரணம்?
பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் வீடு மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஷில்பா ஷெட்டி கணவர் ராஜ் குந்த்ரா, கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஆபாச படங்கள் தயாரித்து விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் உள்ளார். அவர் மீதான பண மோசடி குறித்த வழக்கு நடந்து வரும் நிலையில், அதை அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், மும்பையில் உள்ள ராஜ்குந்த்ராவின் வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அவருக்கு நெருக்கமானவர்கள் வீடுகளிலும் சோதனை நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மொத்தம் 15 இடங்களில் ஒரே நேரத்தில் அமலாக்கத்துறை சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது. ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா தொடர்பான பண மோசடி வழக்கில் ஆதாரங்களை திரட்டுவதற்காக இந்த சோதனை நடைபெறுவதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
Edited by Siva