1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 28 செப்டம்பர் 2020 (18:21 IST)

டிரம்புக்கு எதிராக தேர்தலில் களமிறங்கும் நடிகர் ராக்: பரபரப்பு தகவல்!

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் நிலையில் இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்க இருப்பதாக ஹாலிவுட் நடிகர் டிவைன் ஜான்சன் என்ற ராக் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் 
 
பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ்  உள்பட பல திரைப்படங்களில் நடித்தவரும் WWE விளையாட்டு வீரருமான ராக் என்ற டிவைன் ஜான்சன் திடீரென அதிபர் டிரம்புக்கு எதிராக களம் இறங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
மேலும் ஜனநாயக கட்சி வேட்பாளர்களுக்காக நாடு முழுவதும் பிரசாரம் செய்வேன் என்றும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ’ஜனநாயக கட்சி வேட்பாளர்களானஜோ பிடன் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோருடன் உரையாடியதாகவும் இதனை அடுத்து அவர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய இருப்பதாகவும் அவர் வீடியோ ஒன்றில் கூறியுள்ளார் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது